மாநில அளவிலான வலு தூக்குதல் போட்டி; பி.எஸ்.ஜி கல்லூரி சாம்பியன்

கோவை: ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியுடன் இணைந்து தமிழ்நாடு வலு தூக்குதல் சங்கம் ஏற்பாடு செய்த மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான வலு தூக்குதல் போட்டியில் மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் 8 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, வேலூர், நாமக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 164 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் ஆண்களுக்கு 53, 59, 66, 74, 83, 93,105 மற்றும் 120 கிலோ கிராம் எடை பிரிவிலும் பெண்களுக்கு 43, 47, 52, 57, 63, 72 மற்றும் 84 கிலோ கிராம் எடை பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்களாகவும், பெண்கள் பிரிவில் சேலத்தைச் சேர்ந்த ஏ.வி.எஸ் பொறியியல் கல்லூரி ஒட்டுமொத்த வெற்றி பெற்றது.

இதில் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த எஸ்.பரேமேஷ் போட்டியின் சிறந்த வலிமைமிக்க வீரராகவும், கே.எஸ்.ஆர் கல்லூரியின் வி மோகன பிரியா போட்டியின் வலுவான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter