கோவையில் விளையாட்டில்‌ ஆர்வம்‌ கொண்ட பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய அபிஷேக்‌ பச்சன்

கோவை: மாணவர்கள்‌ கல்வியிலும்‌, விளையாட்டிலும்‌, ஒழுக்கத்திலும்‌ திறன்‌ மிக்கவர்களாகவும்‌ நேர்முகமான ஆற்றல்‌ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகரும்‌. சென்னையின்‌ எப்‌.சி.இணை உரிமையாளருமான அபிஷேக்‌ பச்சன் தெரிவித்தார்.


கோவை: மாணவர்கள்‌ கல்வியிலும்‌, விளையாட்டிலும்‌, ஒழுக்கத்திலும்‌ திறன்‌ மிக்கவர்களாகவும்‌ நேர்முகமான ஆற்றல்‌ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகரும்‌. சென்னையின்‌ எப்‌.சி.இணை உரிமையாளருமான அபிஷேக்‌ பச்சன் தெரிவித்தார்.

கோவை அடுத்த சிங்காநல்லூர்‌ வெள்ளலூரில்‌ அமைந்துள்ள எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களில்‌ ஒன்றான எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளியின்‌ மோஸ்ரீமா கன்வென்சன்‌ சென்டரில்‌ இன்று திரைப்பட நடிகரும்‌. சென்னையின்‌ எப்‌.சி.இணை உரிமையாளருமான அபிஷேக்‌ பச்சன் மற்றும்‌ கால்பந்து விளையாட்டு வீரர்களான அனிருத்‌ தப்பா, எட்வின்‌ சிட்னி வன்ஸ்பால்‌, மசை சைகானி. மற்றும்‌ ஏன்ரோ ஸ்கெம்பிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர்‌. அப்போது, விளையாட்டில்‌ ஆர்வம்‌ கொண்டும்‌, வெற்றிகள்‌ பல குவித்துக்கொண்டிருக்கும்‌ மாணவர்களை மேலும்‌ ஊக்கப்படுத்தும்‌ விதமாகவே இவர்கள்‌ வருகை புரிந்தனர்‌.

இச்சிறப்பு விருந்தினர்களை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின்‌ நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன்‌ அவர்களும்‌, நிர்வாகச்‌ செயலாளர்‌ மோகன்தாஸ்‌ அவர்களும்‌, பள்ளியின்‌ நிர்வாக இயக்குநர்கள்‌ ஸ்ரீஷா மற்றும்‌ நித்தின்‌ அவர்களும்‌, பள்ளியின்‌ நிர்வாக அதிகாரி கார்த்திகேயன்‌ அவர்களும்‌, நான்கு பள்ளியின்‌ முதல்வர்களும்‌, துணை முதல்வர்களும்‌ வரவேற்றனர்‌. அபிஷேக்‌ பட்சன்‌ அவர்களுடைய சென்னையின்‌ எப்‌.சி.கோ.வின்‌ ஆதரவாளராக (Sponsor) எஸ்‌.எஸ்‌.வி.எம்‌ கல்வி நிறுவனம்‌ திகழ்கிறது. சிறப்பு விருந்தினர்களுக்குப்‌ பூங்கொத்தும்‌, நினைவுப் பரிசும்‌ வழங்கி நிர்வாக அறங்காவலர்‌ அவர்கள்‌ கௌரவித்தார்‌.



இதில்‌ சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த அபிஷேக்‌ பச்சன் பேசுகையில்‌, இங்கு பயிலும்‌ மாணவர்கள்‌ கல்வியிலும்‌, விளையாட்டிலும்‌, ஒழுக்கத்திலும்‌ திறன்‌ மிக்கவர்களாகவும்‌ நேர்முகமான ஆற்றல்‌ கொண்டவர்களாகவும்‌ இருப்பதை கண்கூடாகக்‌ கண்டு உணர்கிறேன்‌ என்றார்‌. இன்னும்‌ பல சாதனைகள்‌ புரிந்து மிளிர வேண்டும்‌ என்றும்‌ வாழ்த்தினார். அவருடன்‌ வந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள்‌ பேசுகையில்‌, வாழ்வில்‌ ஏற்ற தாழ்வுகள்‌ இன்ப துன்பங்கள்‌ அனைத்துமே மாறி மாறியே இருக்கும்‌. அதனைக்‌ கண்டு துவண்டுவிடாமல்‌ இலக்கினை நோக்கியே பயணிக்க வேண்டும்‌ என்று கூறினர்.



நிர்வாக அறங்காவலர்‌ அவர்கள்‌ பேசுகையில்‌, அபிஷேக்‌ பச்சன் அவர்களது வருகையும்‌ விளையாட்டு வீரர்களின்‌ வருகையும்‌ வளர்ந்து கொண்டிருக்கக்‌ கூடிய மாணவர்களுக்கு மிகச்‌ சிறந்த ஊக்குவிப்பாகும்‌ என்றும்‌ அவர்களுடைய நினைவிலிருந்து நீங்கா இடம்‌ பிடிக்கும்‌ என்றும்‌ கூறினார்‌. பின்னர் பள்ளியின்‌ நிர்வாக செயலாளர்‌ மோகன்தாஸ்‌ அவர்கள்‌ பேசுகையில்‌, உடல்நலமும்‌, உளநலமும்‌ மாணவர்‌ தம்‌ கற்பனை நலமும்‌ கல்வி திறனும்‌ மேம்பட விளையாட்டு என்பது மிகவும்‌ அவசியம்‌ என்பதை உங்கள்‌ வருகையின்‌ மூலம்‌ எமது மாணவர்கள்‌ உணர்ந்தனர்‌ என்றும்‌ கூறினார்‌



இப்பெரும்‌ விழாவில்‌ மாணவர்கள்‌ பலர் கண்ணுக்கு விருந்தளிக்கும்‌ விதமாக பல கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

Newsletter