சர்வதேச யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கோவை மாணவிக்கு குவியும் பாராட்டு..!

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பல்வேறு ஆசனங்கள் செய்து சாம்பியன் பட்டம் வென்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பல்வேறு ஆசனங்கள் செய்து சாம்பியன் பட்டம் வென்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பீளமேடு ரயில் நிலையத்தில் சுமைதூக்குபவராக பணிபுரியும் ஜி.வி.திருமூர்த்தியின் மகள் மயூரி. இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் பி.காம்.சி.ஏ படித்து விட்டு, தற்போது மேலாண்மை துறையில் படித்து வருகிறார். 



தனது 8 வயது முதல் யோகாசனம் செய்வதில் ஆர்வம் கொண்ட இவர், மாவட்ட மற்றும் மாநில அளவிலான யோகாசன போட்டிகளில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.



இந்நிலையில், அண்மையில் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக 21-25 வயது பிரிவில் பங்கேற்ற இவர், பல்வேறு யோகாசனங்களைச் செய்து 150ற்கு 146 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்று, தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.



பின்னர் தங்க பதக்கம் வென்றது குறித்து பேசிய மாணவி மயூரி, ஆசிய அளவிலான போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும் காலங்களில் யோகாவில் பல்வேறு சாதனைகள் செய்ய ஆவலாக உள்ளதாகவும் இதற்காக கடும் பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். 

Newsletter