சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக்: இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ரெட் டயமண்ட்ஸ் சி.சி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சி.டி.சி.ஏ 2வது பிரிவு லீக் போட்டியில் விங்ஸ் கிரிக்கெட் கிளப்பை 123 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ரெட் டயமண்ட்ஸ் சி.சி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ் 'ஏ' மைதானத்தில் முதலில் பேட்டில் செய்த ரெட் டயமண்ட்ஸ் சி.சி, சுபைர் (92), அருண்குமார் (69) ஆகியோர் அரைசதத்துடன் 47 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விங்ஸ் சி.சி அணி, ராம் குமார் மற்றும் லட்சுமி காந்த் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 33 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ரெட் டயமண்ட்ஸ் சி.சி அணியினர் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.

பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ் 'சி'-ல் நடைபெற்ற மூன்றாவது பிரிவு போட்டியில் 50 ஓவர்களில் இ.ஏ.பி.சி.ஏ 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சீஹாக்ஸ் சி.சி 26.3 ஓவர்களில் 80 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

Newsletter