தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி; வெள்ளி வென்றார் கோவை மாணவி

கோவை: பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூரில் உள்ள அரசு. சீனியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு இந்தியாவின் 65வது தேசிய பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை ஸ்டேன்ஸ் ஐசிஎஸ்இ பள்ளி மாணவி சக்தி ராஜாராம் வெள்ளி வென்றார்.

14 வயத்துக்குப்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவதற்காக கலந்து கொண்ட பதினான்கு வயது சக்தி 33.72 மீ பிரிவில் வெள்ளி வென்றார்.

சிறுவர், சிறுமியர் என 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

பள்ளி விளையாட்டு சம்மேளனத்தின் 65வது தேசிய பள்ளி விளையாட்டு தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது அதிகபட்ச மாணவர் பங்கேற்கும் வகையிலும், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்கும் நடத்தும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.

Newsletter