கோவையில் நடைபெறும் தேசிய அளவிலான தடகள போட்டியில்: தமிழக வீரர்களின் பதக்க வாய்ப்புகள் பிரகாசம்!


கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான இளையோர்களுக்கான தடகள  à®µà®¿à®³à¯ˆà®¯à®¾à®Ÿà¯à®Ÿà¯ போட்டிகளில் தமிழக அணியை சேர்ந்த வீரர்கள் இன்றும் சிறப்பாக விளையாடி வருவதால் பதக்க வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.



கோவையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 10 ம் தேதி துவங்கிய தேசிய அளவிலானஇளையோருக்கான தடகளப் போட்டிகள், வருகிற 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 103 பிரிவுகளாக  à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®•ள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் போட்டிகளில் 34 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடம் பிடித்த தமிழக அணி, இரண்டாவது நாள் போட்டிகளில் 80 புள்ளிகள் பெற்று 4 வது இடத்திற்கு முன்னேறியது. இரண்டாவது நாள் போட்டிகளில் தமிழக அணி சார்பில் டிரையத்லான் என்ற 100 மீட்டர் ஒட்டம், குண்டு à®Žà®±à®¿à®¤à®²à¯, நீளம் தாண்டுதல் மற்றும் ஈட்டி à®Žà®±à®¿à®¤à®²à¯,  à®ªà¯‹à®²à¯ வால்ட் போட்டிகளில் 3 வீராங்கனைகள் தங்கம் பெற்று அசத்தினர். இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது நாள் போட்டிகளில் நீளம் தாண்டுதல், 400 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டம், வட்டு ஏறிதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் தமிழக அணி 8 தங்கங்களை வென்றது. இதன் மூலம் தமிழகத்தின் தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நான்காவது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தையம் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில்  à®¤à®®à®¿à®´à®• வீராங்கனைகள் கீர்த்திகா, ஐஸ்வர்யா ஆகியோர் தலா 4 புள்ளிகளை பெற்று  à®®à¯‚ன்றாவது இடத்தையும்  à®¤à®Ÿà¯à®Ÿà¯ எறிதல் போட்டியில் 2 புள்ளிகளை பெற்ற பிரியதர்சினி இரண்டாம் இட்த்தையும் பிடித்துள்ளனர் 4 வது நாளான இன்றும் தமிழக வீர்ர்கள் சிறப்பாக விளையாடி வருவதால மேலும் பல பதக்கங்களை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

Newsletter