தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்

நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக துப்பாக்கிச் சூடு பிரிவில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஸ்ரீ நிவேதா இரண்டு தங்கங்களை வென்றுள்ளார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (எஸ்.ஏ.ஜி) கோவை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஸ்ரீ நிவேதாவின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் நிகழ்வு மற்றும் அணி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். முன்னதாக காயத்ரி 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பெண்கள் பிரிவில் இரண்டு தங்கங்களைப் பெற்றார்.

பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல்‌ தனிநபர்‌ 10 மீட்டர் “ஏர்‌ பிஸ்டல்‌: பிரிவில்‌ ஸ்ரீ நிவேதா 238.4 புள்ளிகளுடன்‌ முதலிடம்‌ பிடித்து தங்கம்‌ வென்றார்‌. பெண்கள்‌ அணிகளுக்கான 10 மீட்டர் ஏர்‌ பிஸ்டல்‌' பிரிவில்‌ நிவேதா, அன்னுராஜ்‌ சிங்‌, ஈஷா சிங்‌ ஆகியோர்‌ அடங்கிய இந்திய அணிக்கு (1733.69 புள்ளி) தங்கம்‌ கிடைத்தது.

இந்த பதக்கத்துடன், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கோயம்புத்தூர் விளையாட்டு வீரர்கள் மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளனர். காயத்ரி என் மற்றும் ஸ்ரீ நிவேதா பி ஆகியோர் தலா இரண்டு தங்கங்களையும், முகமது சலாவுதீன் வெள்ளி வென்றுள்ளார்.

Newsletter