பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கோவை: பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப்பள்ளியின் 45வது பி.எஸ்.ஜி டிராபியின் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் நேற்று துவங்கியது.

கோவை: பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப்பள்ளியின் 45வது பி.எஸ்.ஜி டிராபியின் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் நேற்று துவங்கியது.

நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நான்கு நாட்கள் நடத்தப்படும் இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், சேலம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 26 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டியை பி.எஸ்.ஜி சர்வஜன உயர்நிலைப்பள்ளியின் செயலாளர் பி.நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

போட்டியின் முதல் நாளில், சவர வித்யா பவன் மற்றும் ஈரோட்டின் வள்ளியப்பா வித்யாலயம் மெட்ரிக் பள்ளி மோதியது. இதில் 34 புள்ளிகள் வித்தியாசத்தில் 51-17 என தோற்கடித்து போட்டியின் இரண்டாவது சுற்றிற்கு சவர வித்யா பவன் நுழைந்தது, மற்றொரு போட்டியில், சபர்பன் மேல்நிலைப்பள்ளி திருவாரூரின் தேசிய உயர்நிலைப்பள்ளியை 65-34 என்ற கணக்கில் தோற்கடித்தது.

பாரதி மெட்ரிகுலேஷன் மற்றும் பி.எஸ்.ஜி சர்வஜனா 'பி' ஆகிய இரு நகர அணிகளுக்கு இடையிலான மற்றொரு போட்டியில், பாரதி மெட்ரிகுலேஷன் 54-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று பெற்றது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:





















Newsletter