மாநில அளவில் பள்ளிகளுக்கிடையிலான தடகள போட்டி; பாலக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

கோவை: ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற 'எஸ்.என்.ஜி.பி.சி' கோப்பைக்கான மாநில அளவிலான இன்டர்ஸ்கூல் தடகள போட்டியில் பாலக்காடு முத்தலமடாவை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி சாம்பியன் ஆனது.

கேரளாவைச் சேர்ந்த 10 பள்ளிகள் உட்பட 60 பள்ளிகளைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தடகள போட்டியில் பங்கேற்றனர். சிறுவர்கள் மற்றும் பெண்கள் என 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பல்வேறு வயது பிரிவுகளின் கீழ் பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

எஸ்.என்.ஜி.இ.டி செயலாளர் பி.எம்.வாசு மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆர்.பி.ரவிச்சந்திரன் ஆகியோருடன் இந்த போட்டியை துவக்கி வைத்தனர். போட்டிகளில் பங்கேற்ற 60 பள்ளிகளில், சிறுவர் பிரிவில் பாலக்காட்டைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், கோவை அவினாசிலிங்கம் மேல்நிலைப்பள்ளி பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றது.

இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை விருந்தினர் பி.எம். வாசு டி.எஸ்.ஓ, ரவிச்சந்திரன் ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:

Newsletter