மாநில அளவிலான கைப்பந்து போட்டி; தி ஃப்ரண்ட்லைன் அகாடமி சாம்பியன்

கோவை: ரத்தினம் குழுமத்தால் சார்பில் நடைபெற்ற 'ரத்தினம் டிராபி'க்கான மாநில அளவிலான இன்டர் ஸ்கூல் கைப்பந்து போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த தி ஃப்ரண்ட்லைன் அகாடமி பள்ளி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோவை: ரத்தினம் குழுமத்தால் சார்பில் நடைபெற்ற 'ரத்தினம் டிராபி'க்கான மாநில அளவிலான இன்டர் ஸ்கூல் கைப்பந்து போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த தி ஃப்ரண்ட்லைன் அகாடமி பள்ளி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியை ரத்தினம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.மாணிக்கம், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கே.முரளிதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஸ்ரீ ராகவேந்திரா வித்யாலயா எம்.எச்.எஸ்.எஸ்., தி ஃப்ரண்ட்லைன் அகாடமி எம்.எச்.எஸ்.எஸ்., சபர்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை லீக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் நான்கு அணிகளாக இருந்தன.

லீக் கட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் வென்ற ஃப்ரண்ட்லைன் பள்ளி ரத்தினம் டிராபியை வென்றது. ஃப்ரண்ட்லைனைத் தொடர்ந்து, ஸ்ரீ ராகவேந்திரா இரண்டாவது இடத்தை பெற்றது. போட்டிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை முறையே சபர்பன் மற்றும் பாரதி பள்ளிகள் பெற்றன.



கோவை மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.ஆறுச்சாமி மற்றும் ரத்தினம் குழும நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

Newsletter