சர்வதேச அளவிலான கராத்தே போட்டி; கோவை மாணவர்கள் 6 பதக்கங்களை வென்று அசத்தல்

மலேசியா: கோலாலம்பூரில் புத்ராஜயா கராத்தே சங்கம் சார்பில் நடைபெற்ற 'கே.எல் மேயர் கோப்பைக்கான' சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை மாணவர்கள் ஆறு பதக்கங்களை வென்றனர்.

மலேசியா: கோலாலம்பூரில் புத்ராஜயா கராத்தே சங்கம் சார்பில் நடைபெற்ற 'கே.எல் மேயர் கோப்பைக்கான' சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை மாணவர்கள் ஆறு பதக்கங்களை வென்றனர்.

10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில், கோவையில் இருந்து ஆறு பேர் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 30 மாணவர்கள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர். இதில் கோவை மாணவர்கள் 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

இந்த போட்டியில் கோவையைச் சேர்ந்த தாரிஷா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஃபைட்டர் கிளப்பைச் சேர்ந்த வித்யுத், தேவ், நவநிதகிருஷ்ணன், வனிஷா மற்றும் நரசிம்மன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். 

கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மாணவர்களை கராத்தே சங்கத்தின் பெற்றோரும் உறுப்பினர்களும் உற்சாகமாக வரவேற்றனர். 

Newsletter