பள்ளிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி; இந்தியன் பப்ளிக் பள்ளி சாம்பியன்

கோவை: பி.வி.எம் குளோபல் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் இந்தியன் பப்ளிக் பள்ளி வெற்றி பெற்றது.


கோவை: பி.வி.எம் குளோபல் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் இந்தியன் பப்ளிக் பள்ளி வெற்றி பெற்றது.

பி.வி.எம் குளோபல் பள்ளியில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இரண்டு நாள் கால்பந்து போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 36க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான இந்த போட்டி நாக் அவுட் அடிப்படையில் நடத்தப்பட்டது.

இந்த போட்டியை பள்ளி முதல்வர் சையதா சர்ப்ராஸ் மற்றும் துணை முதல்வர் ஸ்ரீலதா மணிகண்டன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆண்கள் பிரிவில், தி இந்தியன் பப்ளிக் பள்ளி, (ஈரோடு மற்றும் கோயம்புத்தூர்), பி.வி.எம் குளோபல் பள்ளி மற்றும் கேம்போர்ட் சர்வதேச பள்ளிகள் ஆகியவை அரையிறுதிக்கு நான்கு அணிகளாக தகுதி பெற்றது.



இறுதிப் போட்டியில், தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (டிப்ஸ்) மற்றும் பி.வி.எம் குளோபல் ஸ்கூல் பள்ளிகள் மோதின. இதில் பிவிஎம் குளோபலை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியன் பப்ளிக் பள்ளி வெற்றி பெற்றது.

இதேபோல் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில், டெல்லி பப்ளிக் பள்ளி கோயம்புத்தூர் பள்ளியை 2-0 என்ற கோல் கணக்கில் கிட்ஸ் பள்ளி வென்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் சையதா சர்ப்ராஸ் வழங்கினார்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:

















Newsletter