32வது தேசிய ஜூனியர் தடகளப்போட்டி: தமிழக அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது!


கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலானஇளையோர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் 11 தங்கங்களை பெற்ற தமிழக அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கோவையில் உள்ள நேருவிளையாட்டு மைதானத்தில் கடந்த 10ம் தேதி துவங்கிய தேசியஅளவிலான இளையோருக்கானதடகளப் போட்டிகள், வருகிற 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 103 பிரிவுகளாக நடைபெறும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் போட்டிகளில் 34 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடம் பிடித்த தமிழக அணி, இரண்டாவது நாள் போட்டிகளில் 80 புள்ளிகள் பெற்று 4 வது இடத்திற்கு முன்னேறியது. இரண்டாவது நாள் போட்டிகளில் தமிழக அணி சார்பில் டிரையத்லான் என்ற 100 மீட்டர் ஒட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் ஈட்டி ஏறிதல்,  à®ªà¯‹à®²à¯ வால்ட் போட்டிகளில் 3 வீராங்கனைகள் தங்கம் பெற்று அசத்தினர். இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது நாள் போட்டிகளில் நீளம் தாண்டுதல், 400 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஒட்டம், வட்டு ஏறிதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் தமிழக அணி 8 தங்களை வென்றது.

இதன் மூலம் தமிழகத்தின் தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. டிரையத்லான் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்தின் தங்க பதக்க பட்டியலை துவக்கி வைத்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கொலீசியா, 14 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் 2 வது தங்கம் வென்று அசத்தினர். புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹரியானா மாநில அணி 224 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 219 புள்ளிகளுடன் கேரள மாநில அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. 188 புள்ளிகள் பெற்ற தமிழக அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அணிகள்புள்ளி விபரம்
  
ஹர்யான224
  
கேரளா219
  
தமிழ்நாடு  188
  
உத்தர பிரதேஷம்151
  
மகாராஷ்டிரா112
  
டெல்லி105
  
புனே95
  
கர்நாடகம்51
  
மேற்கு வங்காளம்50
  
ராஜஸ்தான்48
  
உட்டர்கந்து41
  
டெலி39
  
குஜராத்32
  
ஜ்ஹர்கந்து30
  
பீகார்28
  
ஆந்திரா பிரதேஷம்17
  
ஓடிஸா16
  
அஸ்ஸாம்15
  
ஹிமாச்சல்14
  
சத்திஸ்கர்ஹ12
  
கோவா12
  
மணிப்பூர்5
  
புதுவை4
  
மேகாலய2


Newsletter