தேசிய சிலம்பம் போட்டி: 10 பதக்கங்களை அள்ளிய கோவை மாணவர்கள்

கோவை: கேரளாவில் நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டியில், கோவையைச் சேர்ந்த சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பின் (ஐ.எஸ்.எஃப்) மாணவர்கள் 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

கோவை: கேரளாவில் நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டியில், கோவையைச் சேர்ந்த சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பின் (ஐ.எஸ்.எஃப்) மாணவர்கள் 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த சிலம்பாட்ட போட்டிகள் கடந்த நவம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், ஒட்டுமொத்தமாக 35 பதக்கங்களை வென்றனர்.

தமிழ்நாடு அணி பெற்ற 35 பதக்கங்களில், கோவையின் ஐ.எஸ்.எஃப். மாணவர்கள் 6 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட 10 பதக்கங்களைப் பெற்றனர்.

இதில், சி அகில் அரவ் (ஜிஆர்டி பப்ளிக் பள்ளி), எல்பி லிஷாந்த் ஸ்ரீராம் (ஜிஆர்ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி), எஸ் சஞ்சய் (நேவி குழந்தைகள் பள்ளி), எஸ் நேஹா (நேவி குழந்தைகள் பள்ளி), நிதிஷ் குமார் (ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி), ஜி முகிலன் (ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ஆகியோர் அந்தந்த பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

Newsletter