தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 2வது தங்க பதக்கம் வென்றார் நிவேதிதா

திருப்பதியில் நடைபெற்ற இந்திய தடகள சம்மேளனத்தின் 17வது தேசிய இடை மாவட்ட ஜூனியர்ஸ் தடகள போட்டியில், எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி நிவேதிதா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

திருப்பதியில் நடைபெற்ற இந்திய தடகள சம்மேளனத்தின் 17வது தேசிய இடை மாவட்ட ஜூனியர்ஸ் தடகள போட்டியில், எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி நிவேதிதா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தேசிய அளவிலான போட்டியில் நிவேதிதாவிற்கு இது இரண்டாவது தங்கப் பதக்கம் ஆகும். முன்னதாக அவர், இந்த மாத தொடக்கத்தில் குண்டூரில் நடந்த 35வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். தற்போது அவர் இந்திய தடகள சம்மேளனத்தின் 17வது தேசிய இன்டர் மாவட்ட மாவட்ட ஜூனியர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

14 வயது பெண்கள் பிரிவில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில், நீளம் தாண்டுதல் பிரிவில் கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர் நிவேதிதா பங்கேற்றார். சீனிவாசன் மற்றும் விஷ்ணுவின் வழிகாட்டுதலின் கீழ் கோவை தடகள கிளப்பில் தனது பயிற்சியைத் தொடங்கிய 12 வயதான நிவேதிதா, கடந்த 2017இல் மண்டல அளவிலான போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.



பின்னர், முதல் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறாத போதிலும், அவரது கடின உழைப்பின் காரணமாக நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், தமிழக மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2019ல் இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றார்.

Newsletter