இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிக்கு 14 சக்கர நாற்காலிகளை நிதியுதவி அளித்த மசகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்

கோவை: இந்திய ஆண்கள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணி, கடந்த நவம்பர் 15 முதல் நவம்பர் 26 வரை கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷின் விவேகானந்தா கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் கடினமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: இந்திய ஆண்கள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணி, கடந்த நவம்பர் 15 முதல் நவம்பர் 26 வரை கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷின் விவேகானந்தா கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் கடினமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த பயிற்சியின் மூலம் நவம்பர் 27 முதல் டிசம்பர் 8 வரை தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசியா ஒசனியா பகுதி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளனர்.

இந்திய அணி, இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஈராக் அணியினருடன் கடினமான போட்டியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா, சைனா, ஈரான், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, ஆப்கானிஸ்தான், சைனீஸ் Taipei, இந்தோனேசியா மற்றும் சவுதி அரேபியா அணிகள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளன.



இந்நிலையில், இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிக்கு மசகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் 14 சக்கர நாற்காலிகள் வழங்கி உள்ளது. இந்த 14 சக்கர நாற்காலிகளும் கூடைப்பந்து போட்டியின் திறனை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இத்துடன் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தேவையான அனைத்து உபகரணங்களையும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு வழங்கியுள்ளது.



இந்த உதவிகள் அனைத்தும் நவம்பர் 25ம் தேதி, காலை 10 மணிக்கு ராமகிருஷ்ணா மிஷின் கல்வி நிலையங்கள், கோயம்புத்தூரில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. அதே நிகழ்ச்சியில் மாதிரி சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Newsletter