சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக்: சிவாவின் 6 விக்கெட் உதவியுடன் சச்சின் சி.சி எளிதில் வெற்றி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி.என்.சி.ஏ, சி.டி.சி.ஏ நான்காவது பிரிவு லீக் போட்டியில் கோயம்புத்தூர் ரைடர்ஸ் கிரிக்கெட் அகாடமியை வீழ்த்தி சச்சின் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது,

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகள் நகரின் பல்வேறு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒரு ஆட்டத்தில் சச்சின் கிரிக்கெட் கிளப் அணி மற்றும் கோயம்புத்தூர் ரைடர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சச்சின் அணியின், சிவாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத கோயம்புத்தூர் ரைடர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி 24 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிவா அழகு நாச்சியப்பன் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சச்சின் கிரிக்கெட் கிளப் அணி, 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 13வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Newsletter