கூச் பெஹார் டிராபி: ஒடிசாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழகம் அபார வெற்றி

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கூச் பெஹார் யு 19 போட்டியின் மூன்றாம் நாளில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் வித்யுத் வி விஜய்குமாரின் 10 விக்கெட்டுகள் மூலம் ஒடிசாவை எளிதில் வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் தமிழக அணி 23 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஒடிசா தனது இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கியது. தமிழ்நாடு அணியின் அறிமுக வீரர் வித்யுத் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாத ஒடிசா 95 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழந்தது.

ஒரு நாள் மீதம் இருந்த நிலையில், போட்டியை வெல்ல தமிழக அணிக்கு 73 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பின்னர் விளையாடிய தமிழக அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

தமிழக அணி சார்பில் முதல் இன்னிங்சில் கேப்டன் பிரதோஷ் ரஞ்சன் பால் 118 ரன்களும், பூபதி வைஷ்ண குமார் 69 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களான ஆர் விமல் குமார் மற்றும் பி சாய் சுதர்சன் முறையே 31 மற்றும் 37 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம், தமிழக அணி முதல் சுற்று முடிவில் ஏழு புள்ளிகளைப் பெற்றுள்ளது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:

Newsletter