தேசிய அளவிலான ஹாக்கி போட்டி: சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்று சாதனை

கோவை: வாரணாசியில் உள்ள டாக்டர் அம்ரிட் லால் இஸ்ரத் நினைவு சன்பீம் பள்ளியில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில், 17 வயதிற்குப்பட்டோருக்கான மாணவியர் அணி பிரிவில், மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி ‘2019 ஆண்டிற்கான சாம்பியன் பட்டம்’ வென்று சாதனை படைத்துள்ளது.

கோவை: வாரணாசியில் உள்ள டாக்டர் அம்ரிட் லால் இஸ்ரத் நினைவு சன்பீம் பள்ளியில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில், 17 வயதிற்குப்பட்டோருக்கான மாணவியர் அணி பிரிவில், மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி ‘2019 ஆண்டிற்கான சாம்பியன் பட்டம்’ வென்று சாதனை படைத்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு மண்டலங்களில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஹாக்கி போட்டிகளில் முதலிடம் பிடித்த பள்ளிகள் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டன. நவம்பர் 14ம் தேதி தொடங்கி நடைபெற்ற தேசிய அளவிலான லீக் சுற்று ஆட்டங்களில், புது தில்லியின் ஜெனரல் ராஜ் சீனியர் செகண்டரி பள்ளியை 4-1 என்ற கோல்கள் கணக்கிலும், ராய்கரைச் சேர்ந்த ஓ.பி. ஜின்டல் பள்ளியை 11-0 என்ற கோல்கள் கணக்கிலும், ஓமனைச் சேர்ந்த இந்தியன் பள்ளியை 5-0 என்ற கோல்கள் கணக்கிலும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவியர் அணி வென்றது.

இறுதிப் போட்டியில், கர்நாடகா மாநிலம் கொடகு பாரதிய வித்யா பவன் பள்ளியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சாம்பின் பட்டம் வென்றது. சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் எஸ்.வர்ஷினி ‘சிறந்த முன் ஆட்ட வீராங்கனை’ பட்டத்தையும் சி.வி.தனுசியா ‘சிறந்த தடுப்பாட்ட வீராங்கனை’ பட்டத்தையும் பெற்றனர்.



பள்ளியின் 17 வயதிற்குட்பட்ட மாணவர் அணி, தென்மண்டலம்-1 இல் முதலிடம் பிடித்து, தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. எஸ்.எஸ்.ஸ்ரீராம் ‘சிறந்த முன் ஆட்ட வீரர்’ பட்டத்தைப் பெற்றார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் மாணவர் மற்றும் மாணவியர் அணிகள் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று விளையாடியதுடன், தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வந்துள்ளன. கடந்த ஆண்டு பஞ்சாப் லூதியானா குருநானக் மிடில் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தைச் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணிகள் பெற்றிருந்தன.



தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்தின், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்துதல் துறையின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பள்ளியின் விளையாட்டுத்துறை இயக்குநர் ஜெரார்டு ஆரோக்கிய ராஜ், பயிற்சியாளர்கள் எஸ். யோகானந், டி.பி. அனிதா மற்றும் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

Newsletter