32வது தேசிய ஜூனியர் தடகளப்போட்டி: தமிழகத்திற்கு 3 தங்கம், மாணவிகள் அசத்தல்!



32வது தேசிய அளவிலான இளையோருக்கான தடகள போட்டி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று காலை இப் போட்டியில்  à®¤à®¿à®°à¯à®¨à¯†à®²à¯à®µà¯‡à®²à®¿ மாவட்டம் வடக்கன்குளம் பகுதி புதிய தெரசா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி  à®•ொலுசியா என்ற பெண் இவர் 100மீட்டர் ஒட்டப்பந்தையம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் (டிரைலத்தான்) போட்டிகளில் வென்று தங்க பதக்கம் பெற்றார்.



இவரைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம் ஓடுக்கத்துர் அரசு பள்ளி+2 மாணவி ஹேமமாலிணி ஈட்டி எறியும் போட்டியில் கலந்து கொண்டார். தனது சிறப்பான விளையாட்டின் மூலம் இவர் தங்க பதக்கத்தை தட்டிச்சென்றார்.  à®‡à®µà®°à¯ˆ தொடர்ந்து, நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட நிஷா பானு என்பவர் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். 

இந்த தொடர் வெற்றிகள் முலம் தமிழகத்திற்கு 3 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.  à®¤à®™à¯à®•ப்பதக்கம் பெற்ற மூன்று மாணவிகளும் à®…ரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter