சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான 42வது மாவட்ட அளவிலான தடகளப் போட்டி தொடக்கம்

கோவை: பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த கோயம்புத்தூர் சகோதயா சார்பில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான 42வது தடகளப் போட்டிகள் தெக்கலூர் ஶ்ரீ சக்தி இண்டர்நேஷனல் பள்ளியில் இன்று தொடங்கியது. கொங்கு மண்டலத்தின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 75 பள்ளிகளில் இருந்து சுமார் 2250 பள்ளி மாணவர்கள் இந்த தடகளப் போட்டியில் பங்கேற்கின்றனர்.

கோவை: பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த கோயம்புத்தூர் சகோதயா சார்பில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான 42வது தடகளப் போட்டிகள் தெக்கலூர் ஶ்ரீ சக்தி இண்டர்நேஷனல் பள்ளியில் இன்று தொடங்கியது. கொங்கு மண்டலத்தின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 75 பள்ளிகளில் இருந்து சுமார் 2250 பள்ளி மாணவர்கள் இந்த தடகளப் போட்டியில் பங்கேற்கின்றனர்.



ஓட்டப் பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், தடை தாண்டிய ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல தடகளப் போட்டிகள் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறுகின்றன. சிறப்பு விருந்தினராக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் மற்றும் ஶ்ரீ சக்தி இண்டர்நெஷ்னல் பள்ளியின் துணைத்தலைவர் தீபன் தங்கவேலு, கோயம்புத்தூர் சகோதயா அமைப்பின் தலைவர் நவமணி, துணைத்தலைவர் சுகுணா தேவி, செயலாளர் கீதா லக்‌ஷ்மணன் மற்றும் உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்புரை வழங்கிய வாசுதேவன் பாஸ்கரன் பேசுகையில், விளையாட்டு இல்லாமல் மனிதனின் வாழ்க்கை பூரணமடைவதில்லை. விளையாட்டு வாழ்க்கையின் ஓர் அங்கம். விளையாட்டையே வாழ்க்கையாகக் கொண்டு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. நிச்சயமாக வெற்றி முடியும், கோவை, கல்வியில் மட்டுமல்ல சமீப காலங்களில் விளையாட்டுத் துறையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்று பேசினார்.

கோயம்புத்தூர் சகோதயா அமைப்பின் தலைவர் நவமணி தமையுரை நிகழ்த்தி பேசுகையில், சஹோ ஒலிம்பிக்ஸ் 2019 சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளி நிர்வாகத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவர்களின் தனித்திறன் மேம்பாட்டுக்காக பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று பேசினார்.

தொடக்க போட்டியாக 1500 மீட்டர், 19 வயதுக்கு கீழ் ஆண்கள் பிரிவில் அங்கப்பா சிபிஎஸ்இ மாணவர் சஞ்சய் முதலிடம், எஸ்.எஸ்.வி.எம் பள்ளியின் ரிஷி வர்மா இரண்டாமிடம், பி.எஸ்.பி.பி மில்லினியம் பள்ளியின் ஸ்ரீராம் மூன்றாமிடம் பிடித்தனர். 800 மீட்டர் 19 வயதுக்கு கீழ் பெண்கள் பிரிவில் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவி வேதார்ஷினி முதலிடம், சுகுணா பிப்ஸ் பள்ளி பூஜா ஸ்ரீ இரண்டாமிடம், எட்டிமடை அமிர்தா வித்யாலயமின் யுவஸ்ரீ மூன்றாமிடம் பிடித்தனர். 

Newsletter