மாவட்ட அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி: வெற்றி கணக்கை தொடங்கியது ஆர்.கே.எஸ்

கோவை: சி.டி.பி.ஏ கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற ஜூனியருக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் பி.எம் பள்ளியை வீழ்த்திய ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

கோயம்புத்தூர் ஆக்மி லேடீஸ் வட்டம் 85 மற்றும் டெக்ஸிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 14 வயதுக்குட்பட்ட ஜூனியர் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கக்ரித்திலால்ஸ் டிராபிக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

இரண்டாம் நாளின் முதல் போட்டியில், கூடுதல் நேரத்தில் இரண்டு புள்ளிகளைப் பெற்று பி.எம் பள்ளியை வீழ்த்தி ஆர்.கே.எஸ் பள்ளி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் சுகுணா பிப் பள்ளி 38 - 42 என்ற கணக்கில் டெக்சிட்டி பி-யை தோற்கடித்தது.

பி.எஸ்.ஜி சர்வஜனா ஏ மற்றும் நேஷனல் மாடல் இடையேயான மற்றொரு போட்டியில், பி.எஸ்.ஜி சர்வஜனா ஏ 55-22 என்ற கணக்கில் நேஷனல் மாடலை வீழ்த்தியது. அதேபோல, கே.கே.நாயுடு அணியை 55-12 என மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி யங் பிளட் வெற்றி பெற்றது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:

Newsletter