சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக்: சம்பத் சதத்துடன் மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அபார வெற்றி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சி.டி.சி.ஏ 3வது பிரிவு லீக் போட்டியில், மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணியின் டி.சம்பத்குமாரின் சதம் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜேஷ் உதவியுடன் சூரியபாலா கிரிக்கெட் அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மிராக்கிள் சி சி, சம்பத்தின் சதத்துடன் 50 ஓவர்களில் 291 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சூரியபாலா அணி ராஜேஷின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40வது ஓவரில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 126 ரன்கள் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பதிவு செய்தது.

இதேபோல பொள்ளாச்சி என்.பி.டி கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சூர்யபாலா சி.ஏ அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள் சி.சி வெற்றி பெற்றது.

Newsletter