சி.டி.சி.ஏ 6வது பிரிவு லீக் போட்டி: செல்வகுமாரின் அபார பந்துவீச்சினால் முதல் வெற்றியை பெற்றது அப்பாசாமி சிசி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற டி.என்.சி.ஏ - சி.டி.சி.ஏ 6வது பிரிவு லீக் போட்டியில் ஜி.செல்வகுமாரின் அபார பந்துவீச்சின் மூலம் ரெய்ன்ட்ராப்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அப்பாசாமி கிரிக்கெட் கிளப் முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த அப்பாசாமி சி.சி, தற்போது வெற்றிக்கணக்கை துவங்கியுள்ளது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜி.செல்வகுமார் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் ரெய்ன்ட்ராப்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 138 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய அப்பாசாமி கிரிக்கெட் கிளப் போட்டியின் 40வது ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி, முதல் வெற்றியை பெற்றது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :

Newsletter