தேசிய அளவிலான கராத்தே போட்டி; தங்கம் வென்று கோவை மாணவன் சாதனை

கோவை: தேசிய அளவில் அஸ்ஸாமில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவை: தேசிய அளவில் அஸ்ஸாமில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தேசிய அளவிலான கராத்தே போட்டியானது கடந்த வாரம் நடைபெற்றது. இதில், தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.



இதில் 11 வயது முதல் 14 வயதுடையோருக்கான போட்டியில் தமிழகம் சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிப்பாளையத்தில் உள்ள ஊட்டி பப்ளிக் பள்ளியை சேர்ந்த மெல்வின் ஜோசப் என்ற மாணவன் கலந்துகொண்டார். நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே சுதாரித்து ஆடிய மாணவன் மெல்வின் ஜோசப் தன்னை எதிர்த்து விளையாடிய அஸ்ஸாம் மாநில போட்டியாளரை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இதனையடுத்து, இன்று பதக்கம் வென்று மேட்டுப்பாளையம் திரும்பிய மாணவன் மெல்வின் ஜோசப்க்கு அவரது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.

Newsletter