வால்பாறையில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி; ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி வால்பாறையில் முதன் முறையாக ரெசிடென்சி கிளப் உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து 48 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இறுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் காங்கேயம் UPS அணியைச் சேர்ந்த ஆனந்தன், பாலாஜி முதல் பரிசாக ரூ 10 ஆயிரம் மற்றும் கேடயத்தை தட்டிச்சென்றனர். இரண்டாவது பரிசை வால்பாறை ரெசிடென்சி கிளப் ஆன்ன்ட்ரூ, அறிவொளி ரூ 5 ஆயிரமும் கோப்பையை வென்றனர். மூன்றாவது பரிசினை பழனியைச் சேர்ந்த SJS அணியைச் சேர்ந்த பூபதி, பாலு வென்றனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ரெசிடென்சி கிளப் தலைவர் கலைவாணன்.செயலாளர் ஷாஜி.பொருளாளர் சண்முகம் செய்திருந்தனர். முதன் முறையாக வால்பாறையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளை ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர்.

Newsletter