தேசிய அளவில் பல்கலை., இடையிலான துப்பாக்கிச்சூடு போட்டி; 9 பதக்கங்களை வென்ற பாரதியார் பல்கலைக்கழகம்

டெல்லி: ஃபரிதாபாத்தில் உள்ள மனவ் ரச்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச்சூடு போட்டியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சூடு வீரர்கள் நான்கு தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை வென்றனர்.

நவம்பர் 12 முதல் 15ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், பாரதியாரைப் பிரதிநிதித்துவப்படுத்த கோவையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 10 துப்பாக்கி சுடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர். இதில் 8 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்கிய குழுவாக பங்கேற்றது.

இந்த போட்டியில் நாடு முழுவதும் சுமார் 150 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்,

ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என் கயாத்ரி, 50 மீட்டர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும், வெள்ளாளர் பெண்களுக்கான கல்லூரியின் என் நிவேதா தங்க பதக்கத்தையும் பெற்றனர்.

அணிகளுக்கான பிரிவில், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் என்.கயாத்ரி மற்றும் ஜி வர்ஷா, கே.சி.டி லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் ஸ்ரீ தவா மற்றும் தானியா தங்கப் பதக்கங்களையும், வெள்ளாளர் பெண்களுக்கான கல்லூரியின் நிவேதா மற்றும் கீர்த்தனா, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் ராஷிகா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதன் மூலம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்தமாக 54 புள்ளிகளுடன் 9 பதக்கங்களை வென்றனர்.

Newsletter