14வது ஆசிய துப்பாக்கிச்சூடும் போட்டி; வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவி

கத்தாரில் நடைபெற்ற 14வது ஆசிய துப்பாக்கிச்சூடும் சாம்பியன்ஷிப் போட்டியில், 50 மீட்டர் துப்பாக்கிச்சூடும் பிரிவில் 3 பேர் கொண்ட அணியில் விளையாடிய கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஜி.டி.பி.எம் படிக்கும் மாணவி கயாத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் துப்பாக்கிச்சூடும் பிரிவில் 3 பேர் கொண்ட அணியில் விளையாடிய கயாத்ரி, ஹரியானாவின் சைனி காஜல் மற்றும் மகாராஷ்டிராவின் தேஜஸ்வினியுடன் இணைந்தார். இதில் இந்தியா மொத்தம் 3503 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 1165 புள்ளிகளை பெற்றுக்கொடுத்த கயாத்ரி, இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்தார். 3520 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது. 3505 புள்ளிகளுடன் ஈரான் வெள்ளிப் பதக்கம் வென்றது.

Newsletter