சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக்: சிவக்குமாரின் அபார பந்துவீச்சால் 2வது வெற்றியை பதிவு செய்த ஆர்.எம்.எம்.சி.சி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற டி.என்.சி.ஏ சி.டி.சி.ஏ 2வது பிரிவு லீக் போட்டியில் ரெட் டயமண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்க்கு எதிரான ஆட்டத்தில் சிவக்குமார் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் உதவியுடன் ராஜசேகர் மணி மெமோரியல் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.

மைதானம் ஈரமாக இருந்ததன் காரணமாக ஆட்டம் தொடங்க ஒரு மணி நேரம் தாமதமானதுடன் போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரெட் டயமண்ட்ஸ் அணியின் கேப்டன் சிவக்குமாரின் அபார சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 44.2 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் சிவக்குமார் ௫ விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய ஆர்.எம்.எம்.சி.சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 41வது ஓவரில் இலக்கை அடைந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

 à®¸à¯à®°à¯€ சக்தி கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு 2வது பிரிவு லீக் போட்டியில் முதலில் ஆடிய ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 40.3 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி அணி 8.3 இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.

Newsletter