ஜூனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: கோவை வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்

ஆந்திராவின் குண்டூரில் நடைபெற்ற 35வது ஜூனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையின் இளம் தடகள வீராங்கனை சி விஷ்ருதா 400 மீட்டர் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆந்திராவின் குண்டூரில் நடைபெற்ற 35வது ஜூனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையின் இளம் தடகள வீராங்கனை சி விஷ்ருதா 400 மீட்டர் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.



கோவையிலுள்ள உள்ள ஜெனிசிஸ் விளையாட்டுக் கழகத்தில் வைரவநாதனின் கீழ் பயிற்சி பெற்று வரும் விஷ்ருதா 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 400 மீட்டர் தடகள போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 01:04:40 என்ற நேரத்தில் கடந்து பதக்கத்தை தட்டி சென்றார். இந்த போட்டியின் மூன்றாம் நாளில், நீளம் தாண்டுதலில் தங்கம் பெற்ற நிவேதிதாவுக்குப் பிறகு, தற்போது விஷ்ருதா வென்றுள்ளதன் மூலம் கோவைக்கு இரண்டாவது பதக்கமாகும்.

இதுகுறித்து விஸ்ருதாவின் பயிற்சியாளர் வைரவநாதன் பேசுகையில், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விஸ்ருதா தொடர்ந்து பதக்கங்களை வென்று வருவதாகவும் இதற்கு முழுக்க முழுக்க அவரின் கடின உழைப்பும் மன உறுதியுமே காரணம் என்றார். மேலும், ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வலுவான போட்டியாளராக இருப்பார் என நம்புவதாக கூறினார்.

பின்னர் வெற்றி குறித்து விஷ்ருதா பேசுகையில், இந்த போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் நாட்டுக்கு பதக்கம் வெல்வதே எனது கனவு என்று தெரிவித்தார். தற்போது வென்றுள்ள இந்த பதக்கம், ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தன்னை கடினமாக உழைக்க ஊக்குவிப்பதாகவும் அதுவே தனது அடுத்த குறிக்கோள் என்று அவர் கூறினார்.

விஸ்ருதாவின் இந்த சாதனைக்கு ஜெனிசிஸ் விளையாட்டு அறக்கட்டளையின் தலைவர் கே மோகன்ராஜ், பயிற்சியாளர் வைரவநாதன், பயிற்சியாளர்கள் மற்றும் கிளப் உறுப்பினர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter