சி.டி.சி.ஏ லீக் போட்டி: சுரேஷ் பாபுவின் அபார சதம் மூலம் தேசிய விளையாட்டு கிரிக்கெட் அகாடமி வெற்றி

கோவை: ரத்தினம் டெக்கினல் வளாக மைதானத்தில் நடைபெற்ற கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 6வது பிரிவு லீக் போட்டியில், ரெய்ன் டிராப்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தேசிய விளையாட்டு கிரிக்கெட் அகாடமி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங், தேசிய விளையாட்டு கிரிக்கெட் அகாடமியில் சுரேஷ் பாபுவின் அபார சதம் மூலம் 50 ஓவர்களில் 278 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சிவாஜித் 57 ரன்களும் மற்றும் கலிங்கராஜ் 44 ரன்களும் சேர்த்தனர். பின்னர் விளையாடிய ரெய்ன் டிராப்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 38வது ஓவரில் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் தேசிய விளையாட்டு கிரிக்கெட் அகாடமி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதேபோல், பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்றது.

பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு 6வது பிரிவு போட்டியில், அப்பாசாமி சி.சி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நொய்யல் நிஞ்ஜாஸ் சி.சி அணி வெற்றி பெற்றது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:

Newsletter