அகில இந்திய கால்பந்து போட்டி: கோவை சிறுவர்கள் அசத்தல் வெற்றி

கோவாவில் நடைபெற்ற அகில இந்திய 8 பேர் கொண்ட கால்பந்து போட்டியில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள வொல்பேக் சாக்கர் அகாடமியை சேர்ந்த சிறுவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கோவாவில் நடைபெற்ற அகில இந்திய 8 பேர் கொண்ட கால்பந்து போட்டியில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள வொல்பேக் சாக்கர் அகாடமியை சேர்ந்த சிறுவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

13 வயதுக்குப்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்ட இரு வயது பிரிவுகளின் கீழ், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் சேதுராமன் தலைமையில் பெங்களூர் சாக்கர் அகாடமி நடத்திய இந்த நாக் அவுட் போட்டியில் சுமார் 16 அணிகள் பங்கேற்றன.

இதில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற ஜெஃப், சபீல், ரோஷன், கோகுல், மிஷால், ஆர்யமன், மோனிஷ், பூர்னேஷ் மற்றும் பிருத்வி ஆகியோர் அரையிறுதி போட்டியில், அத்லான் ஸ்போர்ட்ஸ் எஃப்சி மும்பையை 7-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு நுழைந்தனர்.

இறுதிப் போட்டியில், ராணிபேட் கால்பந்து கிளப்புக்கு எதிராக விளையாடிய வொல்ப்பேக் சாக்கர் அகாடமி 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Newsletter