21வது ஆசிய முதுநிலை தடகள போட்டியில் பங்கேற்கும் 58 வயது தடகள வீரருக்கு ஆதி மாருதி நிதியுதவி

கோவை : கோவை சரவணம்பட்டியில் உள்ள ஆதி மாருதி ஷோரூமில் பாதுகாவலராக பணிபுரியும் 58 வயது தடகள வீரர் ராமசாமிக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள காசோலையை ஆதி மாருதியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஸ்ரீனிவாசன் வழங்கி ஊக்குவித்தார்.


கோவை : கோவை சரவணம்பட்டியில் உள்ள ஆதி மாருதி ஷோரூமில் பாதுகாவலராக பணிபுரியும் 58 வயது தடகள வீரர் ராமசாமிக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள காசோலையை ஆதி மாருதியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஸ்ரீனிவாசன் வழங்கி ஊக்குவித்தார்.



வரும் டிசம்பரில் மலேசியாவில் நடைபெறவுள்ள 21வது ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ராமசாமிக்கு ஆதி மாருதி நிர்வாக இயக்குநர் 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த மிக நீண்ட காலமாக விளையாட்டில் ஈடுபட்டுள்ள 58 வயதான ராமசாமி, மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தபோதிலும், தனது திறமையின் மூலம் பல பரிசுகளை வென்றுள்ளார். இருந்த போதிலும், முந்தைய உலக முதுநிலை சாம்பியன்ஷிப் போட்டியில் ராமசாமியால் பங்கேற்க முடியவில்லை.

கடைசியாக 2018ம் ஆண்டில் ஸ்பெயினில் நடந்த உலக முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்வு செய்யப்பட்டபோது, ஸ்பான்சர்ஷிப் இல்லாததால் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இந்த விளையாட்டு வீரரின் எழுச்சியூட்டும் கதை சிம்பிளிசிட்டியில் வெளியிடப்பட்டது. இந்த செய்தியைத் தொடர்ந்து, ராமசாமிக்கு ஆதி மாருதி நிர்வாகத்தினர் தங்கள் ஆதரவை வழங்கினர்.

அதேபோல், ராமசாமியின் கதையை நேரில் கண்ட பேஸ்புக் பயனரான பிரசாந்த் கணேஷ், ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ராமசாமிக்கு ஒரு புதிய ஷூவை பரிசளித்து இந்த எழுச்சியூட்டும் விளையாட்டு வீரருக்கு உதவியுள்ளார்.



தடகள வீரர் ராமசாமியிடம் ஆதி மாருதி, நிர்வாக இயக்குனர் எஸ்.சீனிவாசன், மனிதவள மேலாளர் தினேஷ், மதுபாலன், மேலாளர் ஸ்பேர்ஸ், சித்ரராசு, பொது மேலாளர் ஆகியோர் காசோலையை ஒப்படைத்து, அவர் ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter