பெண்களுக்கான அண்ணா பல்கலைக்கழக இடை மண்டல கூடைப்பந்து போட்டி: ஜேப்பியார் கல்லூரி சாம்பியன்

கோவை : கேபிஆர் இன்ஸ்டிடியூட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நடைபெற்ற பெண்களுக்கான அண்ணா பல்கலைக்கழக இடை மண்டல கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சாம்பியன் ஆனது.


கோவை : கேபிஆர் இன்ஸ்டிடியூட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நடைபெற்ற பெண்களுக்கான அண்ணா பல்கலைக்கழக இடை மண்டல கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சாம்பியன் ஆனது.

பெண்களுக்கான அண்ணா பல்கலைக்கழக இடை மண்டல கூடைப்பந்து போட்டியை கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை(அக்., 25) நடைபெற்றது. இதில் 19 மண்டல வெற்றியாளர்கள் பங்கேற்றனர்.

நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் போட்டி நடத்தப்பட்ட இந்த போட்டியில் பாவை பொறியியல் கல்லூரி, பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி ஆகியவை முதல் நான்கு அணிகளாக தகுதி பெற்றது.

லீக் கட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இன்டர் சோன் கூடைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. நாமக்கல்லின் பாவை இன்ஜினியரிங் கல்லூரி போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

போட்டிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி பெற்றன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியின் முதல்வர் டாக்டர் கே.கே.அகிலா, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். 

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :















Newsletter