மாநில அளவிலான சிலம்பம் போட்டி: 20 பதக்கங்களை வென்று கோவை மாணவர்கள் அசத்தல்

சென்னை : சென்னையின் தாம்பரத்தில் நடைபெற்ற அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்கள் உட்பட 20 பதக்கங்களை கோவை சேர்ந்த சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பு மாணவர்கள் வென்றனர்.


சென்னை : à®šà¯†à®©à¯à®©à¯ˆà®¯à®¿à®©à¯ தாம்பரத்தில் நடைபெற்ற அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்கள் உட்பட 20 பதக்கங்களை கோவை சேர்ந்த சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பு மாணவர்கள் வென்றனர்.

துணை ஜூனியர்ஸ், ஜூனியர்ஸ் மற்றும் சீனியர்ஸ் என பல்வேறு வயதினருக்காக நடத்தப்பட்ட போட்டியில் ஐ.எஸ்.எஃப்-ஐ சேர்ந்த 10 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, விழுப்புரம் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஐ.எஸ்.எஃப் மாணவர்கள் 11 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்

வெற்றியாளர்கள்: ஆர் கிரிஷாந்த் (2 வெண்கலம்), சி அகில் ஆர்யவ் (1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்), லக்ஷ்மி பிரியதர்ஷினி (2 தங்கம்), ரவி வர்மா (1 தங்கம் மற்றும் 1 வெள்ளி), திவ்யா (1 தங்கம் மற்றும் 1 வெள்ளி), ஜி முகிலன் (2 தங்கம்).

ஐ.எஸ்.எஃப் தலைவர் டாக்டர் மதன் எஸ் ராஜா மற்றும் பயிற்சியாளர்கள் நந்தகுமார் மற்றும் சங்கர் கணேஷ் ஆகியோர் போட்டியின் வெற்றியாளர்களை வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter