பாரதியார் பல்கலை., இடை கல்லூரிகளுக்கான கூடைப்பந்து போட்டி: பி.எஸ்.ஜி கல்லூரி மீண்டும் சாம்பியன்

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக இடை கல்லூரி போட்டிகளில் வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக இடை கல்லூரி போட்டிகளில் வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

பாரதியார் பல்கலைக்கழகம் ஆண்களுக்கான இடை கல்லூரி கூடைப்பந்து போட்டி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த அக்டோபர் 22-24 வரை நடைபெற்றது.

நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கோபி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டிகளை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பழனியம்மால் தொடங்கி வைத்தார்.

டாக்டர் என்ஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜிஆர்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.டி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நான்கு அணிகள் லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு அணிகளாக தகுதி பெற்றது.



லீக் நிலை போட்டிகளில், ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் ஆனது. இதனை தொடர்ந்து, டாக்டர் என்ஜிபி கலை மற்றும் அறிவியல் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மூன்றாவது மற்றும் நான்கு இடங்களை எஸ்.டி.சி கல்லூரி, பொள்ளாச்சி மற்றும் ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றன.

பின்னர், போட்டியின் வெற்றியாளர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ் பழனியம்மாள் கோப்பைகளை வழங்கினார்.

Newsletter