பாரதியார் பல்கலைக்கழக இடை கல்லூரிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகம் இடை கல்லூரிகளுக்கிடையே நடைபெறும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கியது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகம் இடை கல்லூரிகளுக்கிடையே நடைபெறும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கியது.

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் இரண்டு நாள் போட்டிகளில் கோவை , பொள்ளாச்சி, ஈரோடு, கோபி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிகளை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பழனியம்மால் திறந்து வைத்தார். முதல் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 17-24 என்ற கணக்கில் ஈரோட்டின் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில், கெய்பீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 35-32 என்ற கணக்கில் வீழ்த்தி போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதேபோல், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 23-43 என்ற கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை வீழ்த்தியது. மேலும், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 33-21 என்ற கணக்கில் தோற்கடித்து பாரதியார் பல்கலைக்கழகம் போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :



















Newsletter