சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக்: மோகனின் அபார பந்துவீச்சால் சூர்யபாலா அணி வெற்றி

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முதல் பிரிவு லீக் போட்டியில் ஆறுமுகம் லெவன் பேட்ரியட்ஸ் கிரிக்கெட் கிளப்பை வீழ்த்தி சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணி 50 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரேம்குமார் 64 ரன்கள் அடித்தார்.

பின்னர், 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆறுமுகம் லெவன் பேட்ரியட்ஸ் அணி 36 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணி பந்துவீச்சாளர் மோகன் 6 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

Newsletter