கே.சி.டி கல்லூரியில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி

கோவை : பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் சார்பில் 'சேலஞ்சர்ஸ் டிராபி' மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி கே.சி.டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை : பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் சார்பில் 'சேலஞ்சர்ஸ் டிராபி' மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி கே.சி.டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மாநிலம் முழுவதுமிலிருந்து 42 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், அவர்களின் பார்வை திறன்கள் அடிப்படையில் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை என மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர்கள் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நாகேஷ் டிராபிக்கான தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனர் தலைவர் முத்துசாமி பேசுகையில், மாநிலத்தில் விளையாட்டுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லை எனவும், வீரர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என்று கூறிய அவர், விளையாட்டுக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் நடைபெற்ற போட்டியில், நீல அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிவப்பு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் விளையாடிய நீல அணி, 12 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய சிவப்பு அணி 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில், நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய சிவப்பு அணியின் ஜெபின் குமார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :

















Newsletter