சர்வதேச மற்றும்‌ தேசிய அளவிலான போட்டிகளில்‌ வேளாண்‌ பல்கலை., மாணவிகள் தங்கப்பதக்கம்‌ வென்று சாதனை

கோவை : டெல்லியில்‌ நடைபெற்ற சர்வதேச மற்றும்‌ தேசிய அளவிலான 44வது தேசிய வளையப்பந்து போட்டியில் வேளாண்‌ பல்கலைகழக மாணவர்கள்‌ தங்கப்பதக்கம்‌ வென்று சாதனை படைத்தனர்.

கோவை : டெல்லியில்‌ நடைபெற்ற சர்வதேச மற்றும்‌ தேசிய அளவிலான 44வது தேசிய வளையப்பந்து போட்டியில் வேளாண்‌ பல்கலைகழக மாணவர்கள்‌ தங்கப்பதக்கம்‌ வென்று சாதனை படைத்தனர்.

44வது தேசிய வளையப்பந்து போட்டி அக்., 2 முதல்‌ 6ம் தேதி வரை டெல்லியில்‌ நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ௮ணியில்‌ வேளாண்மை பல்கலைகழக மாணவிகள்‌ ரம்யா முதுகலை முதலாம்‌ ஆண்டு தோட்டக்கலை மற்றும்‌ கீர்த்தனா இளங்கலை நான்காம்‌ ஆண்டு வேளாண்மை ஆகியோர்‌ இடம்‌ பெற்றனர்‌.

ரம்யா பெண்கள்‌ ஒற்றையர்‌ பிரிவு ஆட்டத்தில்‌ தங்கப்பதக்கமும்‌, குழு போட்டியில்‌ வெண்கலப்பதக்கமும்‌ வென்றார்‌. கீர்த்தனா குழு போட்டி மற்றும்‌ இரட்டையர்‌ பிரிவில்‌ வெண்கலப்பதக்கம்‌ வென்றார்‌.

இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள்‌ ஆகிய மூன்று நாடுகள்‌ பங்கேற்ற பிரசிடெண்ட்‌ லீக்‌ கேரம்‌ போட்டிகள்‌ மற்றும்‌ இந்தியா மாலத்தீவு இடையேயான கேரம்‌ டெஸ்ட்‌ தொடர்‌ மாலத்தீவில்‌ அக்டோபர்‌ 5 முதல்‌ 9ம் தேதி வரை நடைபெற்றது.

பல்கலை இளங்கலை முதலாம்‌ ஆண்டு மாணவர்‌ முகேஷ்‌, வேளாண்மை இந்திய ஜீனியர்‌ அணியில்‌ இடம்‌ பெற்று 11 சுற்றுக்கள்‌ கொண்ட பிரசிடெண்ட லீக்‌ போட்டியில்‌, 9 புள்ளிகள்‌ பெற்று வெள்ளிப்பதக்கம்‌ வென்றார்‌. டெஸ்ட்‌ தொடரில்‌ 5 - 0 என்ற புள்ளி கணக்கில்‌ மாலத்தீவை வென்று தொடரை கைப்பற்றினார்‌.

வெற்றி வாகை சூடிய மாணவ மாணவியர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌, பதிவாளர்‌ முனைவர்‌ ௮.சு. கிருஷ்ணமூர்த்தி, முதன்மையர்‌ மாணவர்‌ நல மையம்‌ முனைவர்‌ து. ரகுச்சந்தார்‌, முதன்மையர்‌ வேளாண்மை முனைவர்‌ à®®. கல்யாணசுந்தரம்‌ மற்றும்‌ பல்கலைகழக உடற்கல்வி இயக்குனர்‌ முனைவர்‌ ராகவன்‌ ஆகியோர்‌ பாராட்டினார்‌.

Newsletter