சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி : சுகுணா பிப், சிஎஸ் அகாடமி அணிகள் அபார வெற்றி

கோவை : சுகுணா பிப் பள்ளி நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிக்கான 6வது கிளஸ்டர் கூடைப்பந்து போட்டியில் சுகுணா பிப் மற்றும் சிஎஸ் அகாடமி பள்ளிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளன.

கோவை : சுகுணா பிப் பள்ளி நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிக்கான 6வது கிளஸ்டர் கூடைப்பந்து போட்டியில் சுகுணா பிப் மற்றும் சிஎஸ் அகாடமி பள்ளிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளன.

கோவையில் முதல் முறையாக, சுகுணா பிப் பள்ளி நடத்தும் இந்த கிளஸ்டர் கூடைப்பந்து போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட 178 பள்ளிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளன.

நாக் அவுட் அடிப்படையில் நடத்தப்படும் இந்த போட்டியின் இரண்டாவது நாளில், சுகுணா பிப் மற்றும் சிஎஸ் அகாடமி ஆகியவை போட்டியின் அடுத்த சுற்றில் முன்னேறியது. சென்னை பி.வி.எம்-க்கு எதிராக விளையாடிய சுகுணா பிப் பள்ளி 15-39 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதேபோல, சி.எஸ் அகாடமி அணி 54-15 என்ற கணக்கில் பரணி வித்யாலயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

17 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில், எம்.வி.எம்.ஓசூர், பாலா வித்யா மந்திர், டெல்லி பப்ளிக் பள்ளி, கோயம்புத்தூர், வேலம்மாள் வித்யாலயா, பருத்திப்பட்டு மற்றும் ஸ்ரீ சங்கரா ஆகியவை இரண்டாம் நாள் ஆட்டத்தில் தங்களது வெற்றியை பதிவு செய்தன.

17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், டி.ஏ.வி கோபாலபுரம் பள்ளி 25-03 என்ற கணக்கில் டைட்டன் பள்ளியை தோற்கடித்தது, என்.எஸ்.என் பள்ளி 30-04 என்ற கணக்கில் அரிஸ்டோ பொதுப் பள்ளியை வென்றது. மற்றொரு போட்டியில், விருட்சம் பப்ளிக் பள்ளி 16-02 என்ற கணக்கில் செட்டிநாடு பொதுப் பள்ளியை எளிதாக வீழ்த்தியது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :

















Newsletter