உலக கோப்பை கபடி: பைனலில் இந்தியா

உலக கோப்பை கபடி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.அரையிறுதியில் 73-20 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை தோற்கடித்தது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில், ஆண்களுக்கான 3வது உலக கோப்பை கபடி தொடர் நடக்கிறது. அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 73-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது.


மற்றொரு அரையிறுதியில் தென் கொரியா, ஈரான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஈரான் அணி, 28-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது.

நாளை நடக்கும் பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதுகின்றன.

Newsletter