பாரதியார் பல்கலை., கல்லூரிகளுக்கு இடையிலான கோ கோ போட்டி : பி.எஸ்.ஜி கல்லூரி வெற்றி

கோவை : பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான கோ கோ போட்டியில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் ஆனது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான கோ கோ போட்டியில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் ஆனது.

நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கிய இந்த போட்டியில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றன.

லீக் போட்டிகளின் முடிவில், வி.எல்.பி.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு கலைக் கல்லூரி மற்றும் வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய அணிகள் நுழைந்தன.

லீக் போட்டிகளில், தோல்வியடையாத பி.எஸ்.ஜி கல்லூரி மூன்று போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றியது. பி.எஸ்.ஜி கல்லூரியை தொடர்ந்து, ஒரு தோல்வியுடன் வி.எல்.பி.ஜே கல்லூரி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடங்கள் முறையே ஈரோடு கலைக் கல்லூரி மற்றும் வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றுள்ளன.

கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter