சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கான தென்மண்டல அளவிலான நீச்சல் போட்டி: சென்னை செட்டிநாடு வித்யாசிரிமம் பள்ளி முதலிடம்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் செயல்படும் ஸ்ரீசரஸ்வதி மந்தீர் பள்ளியில் கடந்த 6 ஆம் தேதி முதல் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான நீச்சல் போட்டிகள் துவங்கி நடைபெற்று வந்தன. நாக்கவுட் முறையில் தனி நபருக்காக நடத்தபட்ட இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1200 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

11,14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளின் கீழ் உள்விளையாட்டு அரங்கில் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வந்தன. நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இப்போட்டியின் இறுதி போட்டிகள் இன்று விருவிருப்பாக நடைபெற்றன. 

நீரில் மூழ்கிய நீச்சல் வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தங்கள் இலக்கை அடைய கடுமையாக போராடினர். இதில் 370 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை சென்னை செட்டிநாடு வித்யாசிரிமம் பள்ளி பிடித்தது. 178 புள்ளிகள் பெற்று சென்னை எஸ்.பி.ஓ.ஏ பள்ளி இரண்டாம் இடத்தையும் மேட்டுப்பாளையம் சரஸ்வதி மந்தீர் பள்ளி 164 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 

போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சுழல் கோப்பைகளும் சான்றிதல்களும் பரிசுகளாக வழங்கபட்டன. இப்போட்டியில் தென் மாநிலங்களை சேர்ந்த சுமார் 1200 நீச்சல் வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடதக்கது.

Newsletter