மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

கோவை : சத்தியமங்கலத்தில் நடைபெற்ற 33வது தமிழக மாநில ஜூனியர் திறந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த ஜெனிசிஸ் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு வீரர்களை சந்தித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் ஜெனிசிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 13 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தனர். போட்டியின் முதல் இரண்டு இடங்களை புனித ஜோசப் விளையாட்டு அகாடமி மற்றும் தமிழகத்தின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் 4 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்கள் உள்பட மொத்தம் 13 பதக்கங்களை விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில், மாநில அளவில் மூன்றாம் இடத்தை வென்ற விளையாட்டு வீரர்களை சந்தித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பாராட்டு தெரிவித்தார்.

இந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கிருத்திகா, கிருஷ்ணவேனி, பவித்ரா, கார்த்தி, கோகுல், நந்தினி, சதீஷ்குமார், மணிகண்டன், அபிலாஷ், யுவஸ்ரி, பத்மபாரதி, விகாஷினி மற்றும் விஸ்ருதா ஆகியோர் பதக்கம் வென்றனர்.

Newsletter