மலேசியாவில் நடந்த சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்ற கோவை வீரர்கள்

கோவை : மலேசியாவில் நடந்த சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பை வென்று கோவை திரும்பிய சிலம்பாட்ட வீரர்களுக்கு புளியகுளம் காவல் சிறுவர்-சிறுமியர் மன்றம் சார்பில் போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை : மலேசியாவில் நடந்த சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பை வென்று கோவை திரும்பிய சிலம்பாட்ட வீரர்களுக்கு புளியகுளம் காவல் சிறுவர்-சிறுமியர் மன்றம் சார்பில் போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. 

இந்த சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் பத்துக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். à®…தேபோல ஒற்றைச் சிலம்பம், இரட்டை சிலம்பம் ,ஒற்றை சுருள் வீச்சு, இரட்டைச் சுருள் வீச்சு, மான் கொம்பு, கம்படி பாடம், வாள்வீச்சுஉள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இந்த போட்டியில் இடம் பெற்றிருந்தது.



இதில் கோவை மாவட்டத்தின் சார்பில் புலியகுளம் சிலம்பாலயாகுழுவினர் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையில் 8 பேர் கலந்து கொண்டு 8 தங்கம், 3  வெள்ளி, 8 வெண்கலம்என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளனர்.



இப்படி  வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர்களுக்கு  கோவை மாநகர  காவல்துறை சார்பில் ரயில் நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. à®…தேபோல காவல் உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல், ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா, உதவி  ஆய்வாளர் ஞானசேகரன், தலைமைக் காவலர் ஆனந்த், ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் லதா கூறும்போது ;

இந்த மாணவர்கள் ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட காவல் சிறுவர்-சிறுமியர் மன்றத்தில் தங்களது பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். தற்போது அவர்கள் பெற்றுள்ள வெற்றி அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாய்ப்புகளை பெற்ற பொழுதே நாங்கள் காவல்துறை சார்பில் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினோம். தற்போது சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகர காவல் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படிவிரைவில் பரிசளிப்பு விழாக்கள் நடைபெறும் என தெரிவித்தார்.

Newsletter