மேட்டுப்பாளையத்தில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான நீச்சல் போட்டி; 300 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்பு

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் செயல்படும் ஸ்ரீ சரஸ்வதி மந்தீர் பள்ளியில் இன்று சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான நீச்சல் போட்டிகள் துவங்கியுள்ளன.

இன்று துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1200 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 

மேலும், 11,14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இன்று துவங்கிய இந்த போட்டியினை à®…ர்ஜூன விருதுபெற்ற வில்சன் செரியன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். 

தனித்தனி சுற்றுளாக நடத்தப்படும் போட்டியின் மூலம் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைளுக்கு வரும் ஒன்பதாம் தேதி பரிசு கேடயங்களும், கோப்பைகளும் வழங்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.வி.எம் பள்ளி நிர்வாக அறங்காவலர்கள் மனிமேகலை மோகன்தாஸ், முதல்வர் சுகுனா, அர்ஜூன விருதுபெற்ற ஷைனி வில்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter