புற்றுநோய்க்கு எதிராக களமிறங்கிய 16 ஆயிரம் பங்கேற்பாளர்களுடன் களைகட்டியது கோயம்புத்தூர் மாரத்தான் 2019

கோவை : வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என சுமார் 16,000 பேர் பங்கு பெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் 2019 இன்று கோவையில் நடைபெற்றது.


கோவை : வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என சுமார் 16,000 பேர் பங்கு பெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் 2019 இன்று கோவையில் நடைபெற்றது. 



புற்றுநோய்க்கு எதிராக களமிறங்கிய பங்கேற்பாளர்கள், தங்களது இலக்குகளை கோவை மாநகரின் வீதிகளில் அழகாக ராணுவத்தின் கட்டுப்பாட்டுடன் பறைசாற்றினார்கள். நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் பொதுமக்களும் தங்களது காலை வேளையை உற்சாகமாக்கிக் கொண்டு பங்கேற்பாளர்களையும் உற்சாகப்படுத்தினர்.

மக்களின் ஆரவாரத்தோடு இன்று காலை துவங்கிய கோயம்புத்தூர் மாரத்தான் 2019 யின் 21.1 கி.மீ சுற்றை, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் 2300 பேர் பங்கேற்றனர்.



மேலும், 5500 பங்கேற்பாளர்களைக் கொண்ட 10 கி.மீ மாரத்தான், கோயம்புத்தூர் புற்றுநோய் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.டி.பாலாஜி, மற்றும் புற்றுநோய் இருந்து மீண்ட அருணா, அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்ததாக, ,200 பங்கேற்பாளர்களைக் கொண்ட 5 கி.மீ அரை மாரத்தான், வோடபோன் வர்த்தக தலைவர் முரளி மற்றும் ஐஎன்எஸ் அக்ரானி கமாண்டர் அசோக் ராய், அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. 

காலை பார்க் கேட் சாலையில் மாரத்தான் தொடங்கி, பின்னர் ஸ்டேன்ஸ் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது. மாரத்தான் நடந்த தொலைவு முழுவதும் நீர்ச்சத்து மையங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதை குறிப்பான்கள் மற்றும் உதவியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், பங்கேற்பாளர்கள் சிக்கலின்றி ஓட்டத்தை முடித்தனர். 



21.1 கி.மீ தூர மாரத்தானில் ஆண்கள் பிரிவில் லிங்கராஜ் ஹலியல் முதல் பரிசுனை வெற்றி பெற்றார். 



21.1 கி.மீ தூர மாரத்தானில் பெண்கள் பிரிவில் வி.சோனியா முதல் பரிசுனை à®¤à®Ÿà¯à®Ÿà®¿à®šà¯ சென்றார். 

கோயம்புத்தூர் புற்றுநோய் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.டி.பாலாஜி கூறும்போது, “இந்த ஆண்டு, 7வது வோடஃபோன் கோயம்புத்துர் மாரத்தானை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இந்த முயற்சியைத் தொடங்கும்போது, இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவோம் என்று நினைக்கவில்லை. கோவை மக்கள் மிகப் பெரிய ஆதரவை அளித்துள்ளார்கள். நிகழ்ச்சியின் தரம் உயர்வாக இருந்ததால், இதன் நோக்கம் எளிதாக சென்று சேர்ந்துள்ளது. இன்னும் சிறப்பான சேவைகளைச் செய்ய, எங்கள் அமைப்பு இப்போது சொந்த இடத்திற்கு சென்றுள்ளது. எங்கள் கனவுத் திட்டமான, அரவணைப்பு என்ற கிராமப்புற மாதிரி நோய்த் தடுப்பு சேவையைத் தொடங்கியுள்ளோம். இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் பல கிராமப்புறங்களில் விரிவுபடுத்துகிறோம்."

“பல மாதங்களாக இந்த ஓட்டப்பந்தயத்திற்காக உழைத்த என் குழுவினருக்கு, இந்த வெற்றி பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் தரத்தை உயர்த்துவதை குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினோம். இந்த 7வது பதிப்பை வித்தியாசமாகவும் புதிய அனுபவத்தை அளிக்கும் விதத்திலும் வடிவமைத்திருந்தோம். பங்கேற்பாளர்கள், காவல் துறையினர், பொதுமக்கள், கோவை மாநகராட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததற்கு நன்றி. அடுத்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நடக்கும் அடுத்த பதிப்பு மாரத்தானில் மீண்டும் சந்திப்போம்", என்றார் ரமேஷ் பொன்னுசாமி, ரேஸ் இயக்குநர்.

முடிவுகள் – திறந்தநிலை பிரிவு

1. அரை மாரத்தான் – 21.1 கி.மீ (ஆண்கள்)

 i. லிங்கராஜ் ஹலியல் 

 ii. சங்கர் கணேஷ் 

 iii. சசிகுமார் 

b. பெண்கள்

 i. சோனியா 

 ii. கௌதமி 

 iii. மெரினா மேத்யூ 

2. 10 கி.மீ மாரத்தான்

a. ஆண்கள்

 i. கார்த்திக் 

 ii. அனுப் பிரகாஷ் 

 iii. ராகுல் சிசோடியா 

b. பெண்கள்

 i. லவ்லி த்வாரி 

 ii. பிரியா 

 iii. ஜெனிஃபர் சுசிலா 

முடிவுகள் – மூத்தவர்கள் பிரிவு

3. அரை மாரத்தான் – 21.1 கி.மீ

a. ஆண்கள்

 i. எ. பாபு 

 ii. முகமத் இட்ரிஸ் 

 iii. குணவேல் 

b. பெண்கள்

 i. மீனாட்சி சங்கர் 

 ii. ஊர்மிளா சுஷிகுமார் சுரனா 

 iii. ஷில்பா துகர் 

4. 10 கீ.மீ மாரத்தான்

a. ஆண்கள்

 i. உதயகுமார் 

 ii. அசோகன் சண்முகம் 

 iii. நஞ்சுண்டன் கரி 

b. பெண்கள்

 i. சுபா லட்சுமி 

 ii. நளினி 

 iii. ராமபிரியா புருஷோதாமன் 

Newsletter