சுகுணா பிப் பள்ளி சார்பில் 6வது சிபிஎஸ்இ கிளஸ்டர் கூடைப்பந்து போட்டி ; வரும் அக்., 10-ம் தேதி தொடக்கம்

கோவை : சுகுணா பிப் பள்ளி நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிக்கான 6வது கிளஸ்டர் கூடைப்பந்து போட்டி வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் சுகுணா பள்ளியில் நடைபெறுகிறது.

கோவை : சுகுணா பிப் பள்ளி நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிக்கான 6வது கிளஸ்டர் கூடைப்பந்து போட்டி வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் சுகுணா பள்ளியில் நடைபெறுகிறது.

கோவையில் முதல் முறையாக, சுகுணா பிப் பள்ளி நடத்தும் இந்த கிளஸ்டர் கூடைப்பந்து போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட 178 பள்ளிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

17 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 200 அணிகள் அடங்கிய இந்த போட்டியில் 77 பெண்கள் அணி உட்பட 200 அணிகள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 20 பெண்கள் அணிகள் உட்பட 73 அணிகளும் பங்கேற்கின்றன.

இந்த போட்டிகளை அக்., 10ல் காலை 8 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் துவக்கி வைக்கிறார். ஒரு நாளில் 50 போட்டிகளை நடத்த அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.



இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகுணா நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மி நாராயணசாமி, "போட்டியில் பங்கேற்பவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் சுகுணா நிறுவனங்களால் வழங்கப்படும் எனவும் கோப்பை சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.

மேலும், போட்டியின் வெற்றியாளர்கள் தேசிய அளவில் நடைபெறவிருக்கும் போட்டியில் பங்கேற்பார்கள் என்று கூறினார்.

Newsletter