ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 போட்டி : ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி சாம்பியன்

கோவை : பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்தியாலயாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி வெற்றி பெற்றது.

கடந்த செப்., 30ம் தேதி துவங்கிய இந்த தொடரில் 8 பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி 20 ஓவர்கள் முடிவில் 77 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

ஆட்ட நாயகனாக ராமகிருஷ்ணா அணியின் சி.செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். ஆர்.கே.எஸ் அணியின் எஸ்.சக்திவேல் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். 

Newsletter